Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுவாசிகாவின் முதல் காதல்

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருந்தாலும், கடந்த 2024ல் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் பிரபலமானவர், சுவாசிகா. சமீபத்தில் அவர் நடித்த ‘கருப்பு’, ‘நூறு சாமி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2024ல் டி.வி நடிகரும், தனது நீண்டநாள் காதலருமான பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது முதல் காதல் கைகூடாமல் போனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘பிரேம் ஜேக்கப்பை காதலிப்பதற்கு முன்பு எனக்கு வேறொருவர் மீது காதல் இருந்தது. அது ஒன்றும் தவறான தேர்வு இல்லை. அந்த நபர் அழகாகவும், என்னை நன்கு மதிப்பவராகவும் இருந்தார். ஆனால், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி அவரை மனதளவில் பாதித்தது. குடும்ப பிரச்னைகளையும், காதலையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அந்த உறவு முறிவுக்கு வந்தது’ என்றார்.