கன்னட நடிகை பிரணிதா சுபாஷ், தமிழில் அருள்நிதியுடன் ‘உதயன்’, கார்த்தியுடன் ‘சகுனி’, சூர்யாவுடன் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’, ஜெய்யுடன் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்தார். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் நீச்சல் உடையில் தோன்றி, கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை தனது ேசாஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நித்தின் ராஜூ என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்துள்ள பிரணீதா சுபாஷுக்கு அர்னா என்ற மகளும், ஜெய் என்ற மகனும் இருக்கின்றனர். தனது வாரிசுகளை வளர்ப்பதற்காக நடிப்பில் இருந்து விலகியிருந்த அவர், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘தங்கமணி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
திருமணத்துக்கு பிறகு ஜோதிகா, நயன்தாரா, நஸ்ரியா நாசிம், பிரியாமணி உள்பட பல நடிகைகள் நடித்து வரும் நிலையில், பிரணிதா சுபாஷும் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அதற்காக கிளாமர் உடையணிந்து போஸ் கொடுத்து வருகிறார். இந்து மதத்தில் அதிக ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு விரதங்களை கடைப்பிடிக்கும் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளன. அவரது இன்ஸ்டாகிராமில் 6.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.