Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமன்னாவின் காதலருக்கு வினோத நோய்

மும்பை: கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘லஸ்ட் ஸ்டோரி 2’ என்கிற வெப் தொடரில் தமன்னாவுடன் நடித்தார் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா. அப்போது இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த ஆண்டில் இவர்களின் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் வர்மா தனக்கு இருக்கும் அரிய வகை தோல் வியாதி பற்றி கூறியுள்ளார். சமீபத்தில் இவர் வலைத் தொடருக்கான விளம்பரத்தில் கலந்து கொண்ட போது, தனக்கு இருக்கும் விடிலிகோ என்ற தோல் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது தொற்று நோய் அல்ல. இதனால் தனது முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும், அவற்றை மறைக்க மேக்கப், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றார். இந்த விஷயத்தில் முதலில் பயந்ததாகவும் விஜய் வர்மா கூறியுள்ளார். இப்போது தொடர்ந்து இதற்காக மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருகிறாராம். ஆனாலும் மேக்அப் இல்லாமல் தன்னால் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும் இவர் கூறுகிறார். இந்நோய் குறித்து தமன்னாவிடமும் இவர் சொல்லியிருக்கிறாராம். அவரது ஆலோசனைகளின்படியே சிகிச்சை எடுத்து வருகிறாராம் விஜய் வர்மா.