தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர், தமன்னா. தற்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக தமிழில் தமன்னா நடிப்பில் ‘அரண்மனை 4’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தமன்னா ஆடிய ‘அச்சச்சோ’ என்ற பாடல் டிரெண்டானது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வந்தார். இருவரும் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சமீபத்தில் இருவருக்கும் பிரேக்அப் ஆனதாக தகவல் வெளியானது.
விஜய் வர்மாவை பிரிந்த பிறகு தமன்னா தனது திரைப்பணிகளில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் விஜய் வர்மா, தனது புதிய காதலியை தேர்வு செய்துவிட்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய் வர்மாவின் புதிய காதலி, ஆமிர் கானின் ‘தங்கல்’ என்ற இந்தி படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் வர்மா, பாத்திமா சனா ஷேக் ஆகியோர் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் இணைந்துள்ள போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.