சென்னை: ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றி, பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பிறகு காமெடி நடிகராக மாறிய பாலாஜி, திடீரென ஹீரோவாக சில படங்களில் நடித்தார். பிறகு நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி நடித்தார். தொடர்ந்து ‘வீட்ல விசேஷம்’ படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி நடித்தார். தற்போது சூர்யா, திரிஷா, சுவாசிகா நடிக்கும் ‘கருப்பு’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரில், ‘ஆர்ஜே பாலாஜி’ என்ற தனது பெயரை ‘ஆர்ஜேபி’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் ஊர்வசி. இத்தகவலை ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
மூன்று எழுத்தில் பெயர் கொண்ட சிலர் பிரபலம் அடைந்துள்ளனர் என்று சொன்ன ஊர்வசி, ஆர்ஜே பாலாஜியின் பெயரை ஆர்ஜேபி என்று மாற்றி வைத்துக்கொள்ளும்படி அட்வைஸ் செய்திருக்கிறார்.
இதனால், ‘கருப்பு’ என்ற படத்தின் போஸ்டரில் தனது பெயரை ‘ஆர்ஜேபி’ என்று ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இனி மற்ற படங்களிலும் இப்பெயர் தொடரும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார்.