சென்னை பர்ஸ்ட் லைன் உமாபதி தயாரிப்பில், எஸ்.கிருஷ்ணவேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத், ஐஸ்வர்யா நடித்துள்ள படம், ‘ஹும்’. ஹேமந்த் சீனிவாசன் இசை அமைக்க, விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், ‘இந்த படத்தில் நானும், கணேஷ் கோபிநாத்தும் முகத்தை காட்டாமல் நடித்திருக்கிறோம்’ என்றார். எஸ்.கிருஷ்ணவேல் கூறும்போது, ‘யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் படத்தை இயக்கியுள்ளேன்.
இதில் நடித்து இருப்பவர்களின் முகத்தை திரையில் காண்பிக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படமாக உருவாகி இருக்கிறது. இது பல படங்களின் தழுவலாக, சாயலாக இருக்கலாம், காப்பி என்று சொல்லலாம். ஆனால், கதை புதிது’ என்றார். இதில் 13 கேரக்டர்கள் நடித்துள்ளன. ஆனால் 13 குரல்களும், 13 உடல்களும், அவர்களுடைய உணர்வுகளும் மட்டுமே நடித்து இருக்கின்றன’ என்று சொன்னார்.