சென்னை: ஓல்டு டவுன் பிக்சர்ஸ், பத்மஜா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா பைனான்ஸியல் திரில்லர் படம், ‘ஜீப்ரா’. ஈஸ்வர் கார்த்திக் இயக்கி இருக்கும் இப்படம், வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. தமிழில் வெளியான முதல் ஓடிடி திரைப்படமான ‘பெண் குயின்’ மூலம் கவனத்தை ஈர்த்த ஈஸ்வர் கார்த்திக், வித்தியாசமான திரைக்
கதையுடன் ‘ஜீப்ரா’ படத்தை இயக்கியுள்ளார்.
அரசின் அதிகாரம் மிகுந்த உலகில் நிகழும் நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், நம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இதில், தென்னிந்திய திரைத்துறையின் மூன்று பேர் ஒவ்வொரு கதையிலும் முதன்மை கேரக்ட ரில் நடித்துள்ளனர்.
தமிழில் இருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ், கன்னடத்தில் இருந்து டாலி தனஞ்செயா ஆகியோருடன் பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன், சத்யா அக்கலா ஆகியோர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். எஸ்.என்.ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.