சென்னை: எம்கே சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படம் டம்ளர். இத்திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. டைரக்டர் சிற்பி எம் மாதேஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி காமெடி சென்டிமென்ட் திரில்லர் படமாக இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மூலம் அழகான காட்சிகளை கொண்டு கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பால்பாண்டி. இசை, மினிஸ் தம்பான். பாடல்கள் தாளம் போடும் வகையில் இருக்கும் என்கிறார் மினிஸ் தம்பான். வளர்பாண்டி, எடிட்டிங். அருமையான காட்சிகளை துல்லியமாக கோர்த்து அசத்திருக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், அருள்ஜோதி, ரஞ்சன், சேரன்ராஜ், இலக்கியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மஸ்காரா மயக்குற டான்சர் அஸ்மிதா நடனமாடி அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இத் திரைப்படத்தை வெளியிடுகிறார்கள். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் மிரட்ட வருகிறது டம்ளர் படம் என்கிறது படக்குழு.