சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பது யார் என்ற தகவல் கூறப்படாத நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதன் பிறகு இந்த படத்தில் மீண்டும் கமலுடன் ஹாரிஸ் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக கமல்ஹாசன் நடிக்கிறார். ஒரு மிஷனுக்காக அவர் மீண்டும் ராணுவ பணிக்கு திரும்புவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.