சென்னை: குவான்டம் பிலிம் பேக்டரி சார்பில் ஆர்.கே.வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஸ்கூல்’. இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள் மற்றும் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்குஇளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, ஆதித்யா கோவிந்தராஜ். எடிட்டிங், ராகவ் அர்ஸ். இயக்குனர் ஆர்.கே.வித்யாதரன் கன்னட நடிகர் உபேந்திராவை நேரில் சந்தித்து ஸ்கூல் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரையும் காண்பித்தார். ஸ்கூல் படத்தின் பாடல்கள் மட்டும் டிரைலரை பார்த்துவிட்டு உபேந்திரா, மிக நன்றாக இருப்பதாக கூறியதோடு படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
335