ஸ்பைடர் மேன் காமிக்ஸ்களின் மிக பிரபலமான வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ‘வெனம்’ கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வெனம்’ படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் சிம்பியாட் எனப்படும் ஏலியன்களில் ஒன்றான வெனம், இப்படத்தைத் தொடர்ந்து ’வெனம் 2’ கடந்த 2021ல் வெளியானது.
இந்த நிலையில் இப்படவரிசையின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ உருவாகியுள்ளது. டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஏற்கனவே டிரெண்டில் இருக்கிறது. இந்நிலையில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஆனால், அதற்கு முன்பே தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லரும் அனைத்து மொழிகளிலும் பிரத்யேகமாக ஒளிபரப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த ஆண்டின் கடைசி ஆன்டி –ஹீரோவை வரவேற்கத் தயாராகி வருகிறார்கள்.