Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விதார்த் ஜோடியானார் ரக்‌ஷனா

சென்னை: அருவர் நிறுவனம் சார்பில் சி. வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மருதம்’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலையொட்டி வெளியிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்னைகளை, கைவிட்டுப்போகும் அவனது நிலத்திற்கும் அவனுக்குமான உறவை, சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் முதன்மை கதாப்பத்திரத்தில் விதார்த் நடித்துள்ளார். ரக்‌ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு பி. படத்தொகுப்பு செய்துள்ளார்.