ஐதராபாத்: புரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படத்தில், மிகவும் வித்தியாசமான கேரக்டரில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் தபு, துனியா விஜய் குமார் நடிக்கின்றனர். இந்நிலையில், சம்யுக்தா (மேனன்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. என் கேரக்டரை ஏற்று நடிக்க அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று சொன்னார். இம்மாத இறுதியில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. புரி ஜெகன்நாத் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறார்.