இசை அமைப்பாளராக இருந்து ஹீரோவானவர், விஜய் ஆண்டனி. அவர் இயக்கி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் 2ம் பாகம் சமீபத்தில் வெளியானது. போதை ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தின் சார்பில் ஷெனாய் நகரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் ஆண்டனி கூறுகையில், ‘தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே பல்வேறு வடிவங்களில் போதைப்பொருள் புழங்குவதாக செய்திகள் வருகிறது.
முதலில் விளையாட்டாக தொடங்கும் போதைப்பழக்கம், ஒருகட்டத்தில் நிரந்தர அடிமையாக்கி விடுகிறது. எனக்கு நன்கு தெரிந்த ஒரு நண்பரின் மகன் கூட இதுபோன்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். எனவே, நாம் அனைவரும் இணைந்து போதைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும். சமூகத்தில் இதற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். நான் குடிப்பேன். அதற்கான தெளிவுபெறத்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன்’ என்றார்.