சென்னை: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் தயாரித்துள்ள படம், ‘ஹிட் லிஸ்ட்’. முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர்களான சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கியுள்ளனர். முக்கிய வேடங்களில் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனீஷ்காந்த், சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபி நட்சத்திரா, கருடா ராமச்சந்திரா, அனுபமா குமார் நடித்துள்ளனர்.
ராம் சரண் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டு, ‘மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது’ என்று பாராட்டினார். கே.எஸ்.ரவி குமாரும் பாராட்டு தெரிவித்து, விஜய் கனிஷ்காவின் ஹிட் படங்களின் தொடக்கமாக ‘ஹிட் லிஸ்ட்’ படம் அமையும் என்று வாழ்த்தினார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.