சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்களுக்கு இசை அமைத்துள்ளவர், விஷால் சந்திர சேகர். சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்துக்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தற்போது ஆடியோ புத்தகத்துக்கு இசை அமைக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘ஆப் மூலம் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வரும் குக்கு எப்எம் நிறுவனம், ‘பொன்னியின் செல்வன்’ காலத்துக்கு முன்பு சோழதேசத்தை ஆண்ட அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதையை 9 எபிசோடுகளாக, ஆடியோ புத்தக வடிவில் உருவாக்கு கிறது. இதை கண்களை மூடிக்கொண்டு கேட்டால், திரைப்படம் பார்ப்பது போல் உணர வைக்கும். இதற்கு நான் இசை அமைக்கிறேன். நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’ படத்துக்கும், திரு இயக்கும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்துக்கும் இசை அமைக்கிறேன்’ என்று சொன்னார்.
134