ஐதராபாத்: தெலுங்கு மொழியில் வெளியான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தில் அறிமுகம் ஆனவர், பரியா அப்துல்லா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். தமிழில் சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில், விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ‘தி ஜெங்கபுரு கர்ஸ்’ என்ற வெப்தொடரில் நடித்திருக் கிறார். இது அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பரியா அப்துல்லாவுடன் சுதேவ் நாயர், நாசர், மகரந்த் தேஷ்பாண்டே, தீபக் சம்பத், ஹிதேஷ் தேவ் நடித்துள்ளனர். நிலா மதாப் பாண்டா இயக்கியுள்ளார். மலைவாழ் பூர்வகுடி மக்களை விரட்டியடித்து விட்டு, அங்கு சுரங்கம் தோண்டும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கும், மலையில் வாழும் மக்களுக்கும் இடையிலான போராட்டத்தைச் சொல்லும் ஒரு தொடராக உருவாகியுள்ள இது, வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
67