ஐதராபாத்: அனுஷ்கா நடித்த ‘காத்தி’ என்ற பான் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி மறுபடியும் மாற்றப்பட்டுள்ளது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்துக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம், ‘காத்தி’. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், தவிர்க்க முடியாத காரணமாக வெளியாகவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் 11ம் தேதி திரைக்கு வரும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இதுவரை புரமோஷன் பணிகள் தொடங்கவில்லை. மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. அடுத்த ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கிறது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ளனர். நாகவல்லி வித்யாசாகர் இசை அமைக்க, யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.