சென்னை: மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
24 மணிநேரத்தில் நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது. படம் பற்றி இயக்குநர் ஜெனித்குமார் கூறும்போது, ‘முழுக்க த்ரில்லர் கலந்த ஹாரர் படம் இது. படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டம் காவல் கிணறு பகுதியில் நடந்துள்ளது. நவ. 17ம் தேதி வெளியாகிறது. பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது’ என்றார்