சென்னை: சரத்குமார், மற்றும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். இப்படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமான இதை ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார்.
புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் பொன்னுராஜ் படதொகுப்பை கவனிக்கிறார். படப்பிடிப்பு தேனியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.