சென்னை: விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் வெப்சீரிஸ்களுக்கு பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸை வரும் ஜூலை 18 அன்று வெளியிட உள்ளதாக ஜீ5 ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது. சரவணன், நம்ரிதா எம்.வி நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். 18 கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸை தயாரித்துள்ளார். ஜீ5 தென்னிந்திய உள்ளடக்கத் தலைவர் கவுஷிக் நரசிம்மன் கூறும்போது, ‘‘சட்டமும் நீதியும்’ என்ற இந்த சீரிஸில், நீதியும், மனச்சாட்சியும், துணிச்சலும் எவ்வாறு ஒன்று சேரும் என்பதை, உணர்வுப்பூர்வமாக, நம் வாழ்க்கையோடு இணைந்து காணலாம்” என்றார்.
32