கோடை விடுமுறையில் தங்கள் ஊரில் உள்ள ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து துரத்துகிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான கனிஷ்குமாருக்கு, தங்கள் நிலத்தில் சொந்தமாக ஏன் கிணறு வெட்டக் கூடாது? என்ற யோசனை வருகிறது. ஆனால் அதற்கு கனிஷ்குமாரின் பாட்டி ‘குடும்பத்திற்கு தண்ணியில் கண்டம் இருக்கிறது’ என கூறி தடையாக...
