மகளுக்காக நெகிழ்ந்த மோகன்லால்

மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குனர் ஜூட் அண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துடக்கம்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். நேற்று முன்தினம் திரைக்கு வந்த இப்படத்தில் தன் மகள் அறிமுகமாகியிருப்பது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மோகன்லால். அவரது பதிவில், ‘ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? விஸ்மயா...

ஒரே படத்தில் இணையும் ஜான்வி கபூர், ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா, ஜான்வி கபூர் இருவரும் இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகின்றனர். ஸ்ரீலீலா தற்போது தனுஷுடன் ‘ஓம்’ என்ற படத்திலும் இந்தியில் அனுராக் பாசு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் தற்போது ராஜ் மேத்தா...

சாய் தன்ஷிகாவுக்கு கடமைப்பட்ட விஷால்

விஷால் இயக்குனராக அறிமுகமாகி, ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. முதல்முறையாக 3 வித்தியாசமான வேடத்தில் விஷால் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் விஷால் பேசுகையில், ‘நான் இந்த இடத்தில் இத்தனை பாசிட்டிவாக நிற்பதற்கு...

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘டாக்ஸிக்’ டிரைலர்

யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 1’, ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறிய அவர், அதன்பிறகு நடிகை கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’ என்ற பான் வேர்ல்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவான இப்படம்...

பட விழா மேடையில் தன்னைத் தானே அறைந்துகொண்ட நடிகரால் பரபரப்பு

ஐதராபாத்: அறிமுக இயக்குனர் பிக்சு கோயகுரா புதுமுக நடிகர்களை வைத்து ‘ஹூசாரு பிட்டலு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அன்ஷ், வாசவி கணேசன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். சரண் அர்ஜுன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘டொங்க டொங்க’ என்ற பாடல் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றது. வரும் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரொமோஷன்...

அஞ்சலியின் புதிய அவதாரம்

சென்னை: விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மகுடம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படமான இதில் விஷால் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், யோகி பாபு, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 14ம் தேதி திரைக்கு...

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அமலா பால் படம்

சென்னை: அமலா பால் நடித்துள்ள ‘ஹாஃப்’ என்ற படம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) திரையிட தேர்வாகியுள்ளது. திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்த அமலா பால், தற்போது மீண்டும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் வாம்பயர்...

மீண்டும் வித்தியாசமான கதைக்களத்தில் மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்

சென்னை: கடந்த 2013ம் ஆண்டு நவீன் இயக்கி முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் ‘மூடர் கூடம்’. தற்போது அப்படத்தின் 2ம் பாகம் ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை போன்று வித்தியாசமான கேரக்டர்கள், கதை சொல்லும் முறை, டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன்...

தமிழுக்கு வரும் கியாரா அத்வானி

சென்னை: இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பவர் கியாரா அத்வானி. மாடலிங் துறையில் இருந்த அவர், 2014ம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கபீர் சிங்’, ‘குட் நியூஸ்’, ‘ஷேர்ஷா’, ‘பூஃல் புல்லையா 2’...

இந்தியாவில் இரண்டு நாள் தாமதமாக ரிலீசாகும் ராமாயணா

மும்பை: நமித் மல்ஹோத்ராவின் பிரமாண்ட தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படம் ‘ராமாயணா’. இதன் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6ம் தேதியும் 2ம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளி தினத்திலும் வெளியாகிறது. இப்படத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி,...