விக்கல்ஸ் விக்ரமின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி
தமிழில் ‘லைட் வெயிட் பேபி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம் கூறுகையில், ‘தமிழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனது சொந்த வாழ்க்கை சம்பவங்களை நகைச்சுவையாக மாற்றியிருக்கிறேன். காதல், குடும்பம், உறவுகள் மற்றும் சமூகம் பற்றி நாம் வளரும்போது நம்பும் விஷயங்களை பற்றி இந்த நிகழ்ச்சி பேசுகிறது. அதுபற்றி கேள்விகள் கேட்க தொடங்கும்போது...
கியாராவின் படம் ரூ.322 கோடி வசூல்
யஷ் நடித்த ‘டாக்ஸிக்: தி ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ என்ற பான் இந்தியா படம், 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.322 கோடி வசூல் செய்துள்ளது. மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி படம் ரிலீசானது. கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகியிருந்த இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா...
தீபாவளிக்கு வருகிறது ‘தி வேர்ல்ட் ஆஃப் அரசன்’
வட சென்னை பின்னணியில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ‘அரசன்’. பல்வேறு தடைகள், பிரச்னைகளை தாண்டி இப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ்...
கீர்த்தியை மறக்க விரும்பாத ஐஸ்வர்யா லட்சுமி
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த படம், ‘கட்டா குஸ்தி 2’. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்லா அய்யாவு எழுதி இயக்கியிருந்த இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை ரூ.55 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்...
ரூ.16 கோடி வாட்ச் அணிந்து வந்த அனன்யா: மும்பை விழாவில் பார்வையாளர்கள் ஆச்சரியம்
மும்பை: மும்பையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் நடிகை அனன்யா பாண்டே ரூ.16 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, கவர்ச்சி ஆடைகளை அணிந்து பொதுநிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் பெயர் பெற்றவர். அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்....
மிட்நைட் பார்ட்டிக்கு தடை; குடியிருப்பு உரிமையாளர் மீது நடிகை உர்பி ஜாவேத் புகார்
மும்பை: மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் நடிகை உர்பி ஜாவேத். நேற்று முன்தினம் இரவு உர்பி ஜாவேத்தின் வீட்டிற்கு வந்த நபர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ‘எனது வீட்டிற்கு பார்ட்டிக்கு வரும் விருந்தினர்களை எவ்வாறு சட்டவிரோதமாக தடுக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பி...
இன்டர்நெட் டிரெண்டுக்காக விருது தர்றாங்க: சரண்யா துராடி ஆவேசம்
சென்னை: நடிகை சரண்யா துராடி கூறியது: விருதுகள் சில சமயங்களில் இணையத்தில் வைரலாகும் மேலோட்டமான டிரெண்டுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இணையத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு இடம் இருக்கிறது, அது உண்மைதான். ஆனால், புவிசார் அரசியல், வரலாறு, மொழி, கலாச்சாரம், இலக்கியம் தொடங்கி முக்கியமான சமூகப் பிரச்சினைகள், அரசியல், ஆன்மீகம் மற்றும் தமிழ் மெய்யியல் தத்துவம்...
நடிகருடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட நடிகையால் பரபரப்பு
மும்பை: பாலிவுட் நட்சத்திரங்கள் அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பாலிவுட் நடிகர் அஹான் பாண்டே மற்றும் நடிகை அனீத் பட்டா இடையே காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இதற்கு முன்பு ‘சலாம் வெங்கி’ படத்தில் நடித்த அனீத் பட்டாவுடன் இணைத்து...
உணர்வு போராட்டத்தை பேசும் துரோகம் பழகு
சென்னை: மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா, நடிகை நந்திதா...
