100 சினிமா பிரபலங்கள் வெளியிட்ட பாடல்
சென்னை: கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள். கட்டெறும்பு யூடியூப் சேனலில் இந்தப்பாடல் வெளிவந்துள்ளது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . அனைத்து தரப்பினரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர்,இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாகவும் நடித்து முடித்துள்ளார்.