மொட்டை ராஜேந்திரனின் ராபின்ஹுட் டிரைலர் வெளியானது
சென்னை: லுமியர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்து அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க, 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள்ள திரைப்படம் ‘ராபின்ஹுட்’. இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு செய்து ஸ்ரீநாத் விஜய் இசையமைதுள்ளார். 1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி...
அக்கா - தம்பியாக அருள்நிதி, மம்தா நடிக்கும் மை டியர் சிஸ்டர்
சென்னை: அருள்நிதி மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனை...
நகைச்சுவை கலாட்டாவாக உருவாகும் ரௌடி மற்றும் கோ
சென்னை: ரசிகர்களுக்கு தரமான படங்களை தயாரித்து வழங்கி வரும் ஃபேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி மற்றும் கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த், ராசி கண்ணா முதன்மை வேடத்தில் நடிக்க சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி மற்றும் சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில்...
நடிகைகளுக்கு உருவகேலி நடக்கிறது: கயாடு லோஹர் பளீச்
சென்னை: இந்தாண்டு வெளியான ‘டிராகன்‘ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கயாடு லோஹர். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா முரளியுடன் ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’, மற்றும் சிம்புவின் 49வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி...
பழங்குடியின மக்களுக்கு உதவிய தயாரிப்பாளர்
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் மருத்துவருமான விமலாராணி பிரிட்டோ, நீலகிரி, கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும், நலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘சீக் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் விமலா ராணி பிரிட்டோ நடத்தி...
தாவுத்: விமர்சனம்
இந்தியாவுக்கு வரும் போதை மருந்துகளை இங்கு சப்ளை செய்யும் பலே ரவுடிகள் சாய் தீனா, அபிஷேக் ஆகியோருக்கு இடையே யார் வல்லவன் என்ற மோதல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட ஆட்களுக்கு போதை மருந்துகள் சப்ளை செய்வதில் தாமதமானால், ஆளையே வெட்டிச் சாய்க்கும் கூட்டத்தின் தலைவன் தாவுத். சமூக விரோதிகளான அவர்களை போலீசார் விரட்டுகின்றனர். இந்த சடுகுடு ஆட்டமே...
மதறாஸ் மாஃபியா கம்பெனி: விமர்சனம்
பிரபல தாதா ஆனந்தராஜ். அவரது தலைமையை விரும்பாத சில அதிருப்தியாளர்கள், கூடவே இருந்து அவரை கொல்ல சதி திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே ஐபிஎஸ் அதிகாரி சம்யுக்தா சண்முகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து, ஆனந்தராஜை என்கவுண்டர் செய்ய டிஜிபி ஆணையிடுகிறார். போலீசாரின் திட்டம் நிறைவேறியதா? சூழ்ச்சியில் சிக்கிய ஆனந்தராஜ் என்ன ஆகிறார் என்பது மீதி கதை. மதறாஸ்...
அஜித் எனக்கு இன்ஸ்பிரேஷன்: சொல்கிறார் துல்கர் சல்மான்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். துல்கர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். இவர் நடிப்பில் நேற்று வெளியான படம் காந்தா. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்...
பிரியங்கா திரிவேதியின் மொபைல் ஹேக் செய்தவர் கைது
பெங்களூரு: கன்னட நடிகர் நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா திரிவேதி ஆகியோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதில், சுமார் ரூ.1.5 லட்சம் இழப்பீடு ஏற்பட்ட சைபர் குற்ற சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் பிரியங்கா திரிவேதி ஆன்லைனில் சில பொருட்கள் ஆர்டர்...
