தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

2 பட தலைப்புகளை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்

சென்னை: ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி சினிஷ் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சினிஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பிடப்பட்டு டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் அர்ஜுன் தாஸ் ஹீரோ. வில்லனாக சாண்டி, நாயகியாக தேஜு அஸ்வினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக ஹேஷம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சத்யா, எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தை ஷன்ஜன் மற்றும் சினிஷ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். அடுத்த படத்துக்கு ‘நிஞ்சா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாரத் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக பிரத்னா நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இதற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சாய் தேவானந்த் மற்றும் சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த விழாவில் பட தலைப்புகளை அறிமுகப்படுத்தி சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, ஆர்யா, நெல்சன், பா.ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.