4 ஆண்களை ஒரே நேரத்தில் டேட்டிங் செய்த முமைத்கான்
சென்னை: 40 வயசை சமீபத்தில் எட்டிய கவர்ச்சி நடிகை முமைத் கான், பெரும்பாலும் தெலுங்கு, தமிழ், இந்தி பட பாடல்களுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடியதன் மூலமாவே பிரபலமானார். அதே போல் தமிழில் கதாநாயகியாக ‘பௌர்ணமி நாகம்’ படத்திலும், பிரஷாந்த் நடித்த மம்முட்டியான், விஜய் நடித்த வில்லு ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக முமைத் கான் கந்தசாமி படத்தில் ஆடிய ‘ஏன் பேரு மீனா குமாரி’ பாடல் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், தான் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியபோது, ‘‘சமீபத்தில் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு முழு ஓய்வில் இருந்து வருகிறேன். இந்த விபத்துக்கு முன்னர் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்தேன். ஆனால் தற்போது நான் டேட்டிங் செய்த யாருடனும் தொடர்பில் இல்லை. தனிமையில் வாழ்ந்து வருகிறேன். சினிமாவில் நடிக்காவிட்டாலும் நடித்தபோது சம்பாதித்த பணத்தில் இப்போதும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்’’ என்றார்.
