தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 5 கதைகள்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ள படம், ‘அனந்தா’. பா.விஜய் வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளனர். மீண்டும் எழும் நடனக்கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் மனிதன், அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் வெளிநாட்டவர், கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் தொழிலதிபர் என்று, இப்படம் 5 வித்தியாசமான கதைகளை கொண்டுள்ளது.

படத்தின் இறுதியில் 5 கதைகளும் இணையும்போது, தெய்வீகம் என்பது கோயில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்கிவிடுவது இல்லை. அது நம்பிக்கை, இரக்கம், சரணாகதி போன்ற ஒவ்வொரு செயலிலும் அமைதியாக வாழ்கிறது என்ற அர்த்தத்தை வெளிப்படுத்தும். சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 23ம் தேதி முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இப்படத்தின் உலக தமிழ் உரிமையை ஏ.பி இண்டர்நேஷனல் வாங்கியுள்ளது. பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, கலா நடனப் பயிற்சி அளித்துள்ளார். எஸ்.ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார்.