ஹீரோ எழுதி நடிக்கும் படம்
தக்ஷன் விஜய் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் படம், ‘சினிமா கிறுக்கன்’. கேரக்டருக்காக நீளமான தலைமுடி, தாடி, மீசை வளர்த்துள்ளார். மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி.பியூலா தயாரிக்கிறார். ‘சமூக விரோதி’, ‘பொதுநலன் கருதி’ ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா, இதை வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குகிறார். தக்ஷன் விஜய் தந்தையாக ஜி.எம்.குமார் நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் தாயாகவும், பிறகு ‘வாழை’ படத்திலும் நடித்திருந்த ஜானகி, தக்ஷன் விஜய் தாயாக நடிக்கிறார். தவிர அமுதவாணன், ஜீவா தங்கவேல், சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர். வினு பெருமாள் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் இசை அமைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.