குண்டு வெடிப்பு சம்பவ பின்னணியில் மனிதாபிமானம் பேசும் பாய்
சென்னை: ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். அந்தப் படம் ‘பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் இத்ரிஸ்.படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் பத்து தல இயக்குனர் ஓபிலி என். கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இன்னொரு எதிர்மறைப் பாத்திரத்தில் சீமன் அப்பாஸ் நடித்துள்ளார். ஹீரோவும் தயாரிப்பாளருமான ஆதவா ஈஸ்வரா கூறும்போது, ‘‘இந்தப் படம் மதங்களைக் கடந்து மனிதாபிமானம் பற்றிப் பேசுகிறது. குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் எப்படி கொல்லப்படுகிறார்கள். அது தொடர்பான பிரச்னைகளைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் கோவையை மையமாகக் கொண்டது. ஆகஸ்ட் 8ம் பிவிஆர் பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடுகிறது. மலையாளத்திலும் ரிலீஸ் ஆகிறது.