தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஹீரோ மகனுக்கு வில்லனான அபிநய்

மறைந்த முன்னாள் ஹீரோ ஆதித்தன் மகன் நிவாஸ் ஆதித்தன் ஹீரோவாகவும், ‘துள்ளுவதோ இளமை’ அபிநய் வில்லனாகவும் மற்றும் எஸ்தர், ஆத்விக் நடித்துள்ள படம், ‘கேம் ஆஃப் லோன்ஸ்’. ஜேஆர்ஜே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ள இது, வரும் 17ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது. சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோ கோஸ்டா இசை அமைத்துள்ளார். பிரதீப் எடிட்டிங் செய்ய, சஜன் அரங்கம் அமைத்துள்ளார். அபிஷேக் லெஸ்லி எழுதி இயக்கியுள்ளார்.

அவர் கூறுகையில்,

‘கொரோனா லாக்டவுனில் இப்படத்துக்கான கரு தோன்றியது. நான் ஐடியில் பணியாற்றுகிறேன். ஏஐயிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் குறும்படத்தை இயக்கினேன். அது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது. ஆன்லைன் கேமிங், ஆன்லைன் லோனில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக படத்தை எழுதி இயக்கியுள்ளேன்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இதில் வழக்கமான பாட்டு, பைட், காமெடி ஆகிய அம்சங்கள் இருக்காது. 90 நிமிடங்கள் படம் ஓடும். ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, ஆன்லைன் லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது’ என்றார்.