தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய விஜய் விஷ்வா

சென்னை: நடிகர் விஜய் விஷ்வாவின் வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் திறமை மற்றும் சாதனை புரிந்தவர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில் விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகிறது. மதுரை, சென்னை, விருதுநகர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நிகழ்வுகளை நடத்திய பிறகு, இந்நிறுவனம் இம்முறை இலங்கையில் தனது முதல் சர்வதேச விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் புதிய முயற்சியாக “Utsav Mela 2025” என்ற பெயரில் அமெரிக்காவின் Dallas நகரில் நடைபெற்ற கலாச்சார விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் போட்டிகளை ஏற்பாடு செய்தது. விமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். டிமாண்டி காலனி 2 படத்தின் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பங்கேற்றார். இந்நிகழ்வுக்கான முழுமையான ஏற்பாடுகளை வி.வி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்எஸ்எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சக்தி நவராதித்தன், வளர்மதி, கிருஷ்ணா மேற்கொண்டனர்.