நடிப்பிலிருந்து விலகுகிறார் சமந்தா: ஷாக் ரிப்போர்ட்
சென்னை: உடல் நலம் காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளார். சமந்தா தனது வாழ்க்கையில் புது முடிவு எடுத்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, “இனிமேல் எனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். இதில் உடற்பயிற்சி மற்றும் திரைப்படங்கள் இரண்டும் அடங்கும். நான் இப்போது சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் அவை அனைத்தும் எனக்கு பிடித்தமானவை அல்ல. அதனால் இனிமேல் நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நான் தயாரிக்கும் படங்கள் தொடங்கி நான் முதலீடு செய்யும் பிஸ்னஸ் முதல் எல்லாமுமே முழு மனதுடன் செய்யப்போகிறேன். நான் இனி ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கப்போவதில்லை. நான் என் உடல்நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். அதை உணர்ந்ததால், என்னுடைய வேலையை நான் குறைக்க விரும்புகிறேன். புராஜெக்டுகளின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அதனுடைய தரம் நிச்சயம் அதிகரிக்கும். அதே சமயம் உடல்நலம் காரணமாக நடிப்பதையும் நிறுத்தி வைக்கலாம்” என்றுள்ளார்.