தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆக்‌ஷன் ஹீரோயினா? அப்பா பயந்தார்: கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு

சென்னை: துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’. சூப்பர் ஹீரோ கான்சப்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 10 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. சென்னையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய...

சென்னை: துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’. சூப்பர் ஹீரோ கான்சப்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 10 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. சென்னையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய கல்யாணி பிரியதர்ஷன், ‘‘லோகாவிற்கு இந்தளவு பாராட்டும், வரவேற்பும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் ஆதரவால்தான் படம் இந்தளவு வெற்றிபெற்றுள்ளது. அப்பாவிடம் ஆக்சன் படம் பண்ணபோகிறேன், என்றவுடன் ‘‘நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்கா பார்த்துக்கோ” என்றார். இந்த வெற்றிக்கு நான் மட்டும் கிரெடிட் எடுத்துக்கொள்ள முடியாது. மொத்த குழுவின் உழைப்பும் தான் காரணம்” என்றார்.

துல்கர் சல்மான் பேசும்போது, ‘‘நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு ஆசிரியராக மாணவர்களை அழைத்து வந்துள்ளேன். நாங்கள் இதை கேரளா அளவில் மட்டுமே உருவாக்க ஆரம்பித்தோம். இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள். கல்யாணியைத்தவிர இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக நடித்திருந்தார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலாவுக்கு நன்றி. எதிர்காலத்தில் இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.