தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நல்ல வேடங்கள் நடிகர் லோகுவின் ஆசை

சென்னை: மாஸ்டர் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில், முதல் காட்சியில் விஜய்சேதுபதி உடன் நடித்து, தமிழ்த் திரையில் அறிமுகமானவர் லோகு. பின் சுழல் வெப் சீரிஸ், தற்போது படை தலைவன் மற்றும் பேரன்பும் பெருங்கோபமும் ஆகிய படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விரைவில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் திரைக்கு வரவுள்ள தீயவர் குலை நடுங்க...

சென்னை: மாஸ்டர் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில், முதல் காட்சியில் விஜய்சேதுபதி உடன் நடித்து, தமிழ்த் திரையில் அறிமுகமானவர் லோகு. பின் சுழல் வெப் சீரிஸ், தற்போது படை தலைவன் மற்றும் பேரன்பும் பெருங்கோபமும் ஆகிய படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விரைவில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் திரைக்கு வரவுள்ள தீயவர் குலை நடுங்க மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ஆர்யன் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் கதிரின் தந்தை தான் லோகு. நடிப்பின் மீதான அவரது ஆர்வமும், திறமை மிக்க நடிப்பும் அவரை தனித்துவமாக காட்டுகிறது. அவரது திறமையை, விமர்சகர்களும் ரசிகர்களும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து, மக்கள் விரும்பும் நடிகராக மிளிர வேண்டும் என்பது தான் தனது ஆசை எனத் தெரிவித்துள்ளார் லோகு.