நடிகையின் இடுப்பை கிள்ளிய நடிகர் மன்னிப்பு கேட்டார்
பாட்னா: போஜ்புரி நடிகர் பவன் சிங்கும் நடிகை அஞ்சலி ராகவ்வும் இணைந்து நடித்த ‘சையா சேவா கரே’ என்ற பாடலை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் லக்னோவில் நடந்தது. அப்போது மேடையில் பார்வையாளர்களை நோக்கி அஞ்சலி பேசிக் கொண்டிருந்தபோது, நடிகையின் இடுப்பைத் தொட்டுப் பேசிய நடிகர் பவன் சிங் அங்கே ஏதோ சிக்கி இருக்கிறதே, எனக் கிண்டலும் அடித்துள்ளார். பொது இடத்தில் பார்வையாளர் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது என பவன் சிங்கின் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்து பலரும், அவருக்கெதிராக கண்டன கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் தனது இடுப்பில் ஒரு நடிகர் கை வைக்கிறாரே, என நடிகை அஞ்சலி, ஆவேசப்படாமல் சிரித்து ஆதரிக்கிறாரே, அது நியாயமா? எனக் கேட்டு அவரது ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இதையடுத்து அழுதபடி வீடியோ வெளியிட்ட அஞ்சலி, ‘‘திடீரென பவன் சிங் இடுப்பில் கைவைத்தபோது, சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த நான் அதே முகபாவத்தை காட்டிவிட்டேன். அது எனது தவறா? இனி இந்த சம்பவத்துக்கு பிறகு நான் நடிக்கவே மாட்டேன்’’ என கூறியுள்ளார்.
இதற்கிடையே, சர்ச்சைக்கு காரணமான நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதில், ‘‘உங்கள் (அஞ்சலி) மீது எனக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை. எனினும், என் நடத்தையால் நீங்கள் புண்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.