தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வீட்டில் நுழைந்த பாம்பை பிடித்த நடிகர் சோனு சூட்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை அவர் சாகசமாக மீட்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவர் வெறும் கைகளால் அந்த பாம்பைப் பிடித்து, பின்னர் அதை பாதுகாப்பாக காட்டில் விடுவிக்குமாறு தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

சோனு சூட்டின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அவரது தைரியமான செயல் பெரிதும் புகழப்பட்டது. “வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்” என்ற ஹேஷ்டேக் வைரலானது. ஆனால், அதே சமயம், இந்த சம்பவம் முழுக்க முழுக்க பாராட்டுக்களை மட்டுமே பெறவில்லை.

பாம்புகளை கையாள்வதில் அனுபவம் இல்லாதவர்கள் இதுபோன்ற செயல்களை முயற்சிப்பது ஆபத்தானது என்பதால், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பினார்கள். இது பற்றி சோனு சூட் கூறும்போது, ‘‘நான் முதல் தடவையாக இதுபோல் பாம்பை பிடித்திருக்கிறேன். மற்றவர்கள் இதுபோல் செய்ய வேண்டாம். பாதுகாப்புதான் முதல் முக்கியம்’’ என எச்சரித்துள்ளார்.