தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கதாநாயகனாக நடிப்பது ஏன்? நடிகர் பாலா

சென்னை: ஜெய் கிரண் தயாரிக்க, ஷெரிஃப் எழுதி இயக்க, காமெடி நடிகர் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘காந்தி கண்ணாடி’. முக்கிய வேடங்களில் அர்ச்சனா, பாலாஜி சக்திவேல், நமீதா கிருஷ்ணமூர்த்தி, மதன், ஆராத்யா, அமுதவாணன், மனோஜ் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். படம் குறித்து பாலா உருக்கமாக பேசியதாவது: 19 படங்களில் நடித்திருந்தாலும், 11...

சென்னை: ஜெய் கிரண் தயாரிக்க, ஷெரிஃப் எழுதி இயக்க, காமெடி நடிகர் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘காந்தி கண்ணாடி’. முக்கிய வேடங்களில் அர்ச்சனா, பாலாஜி சக்திவேல், நமீதா கிருஷ்ணமூர்த்தி, மதன், ஆராத்யா, அமுதவாணன், மனோஜ் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். படம் குறித்து பாலா உருக்கமாக பேசியதாவது: 19 படங்களில் நடித்திருந்தாலும், 11 படங்களில் நான் வரவே இல்லை. காரணம், எடிட்டிங்கில் எனது காட்சி தேவையில்லை என்று நீக்கிவிடுவார்கள். இதற்காக அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஒரு நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸிடம், நான் கதாநாயகனாக வேண்டும் என்று சொன்னேன். என்னை வாழ்த்திய அவர், ‘நீ கதாநாயகனாக வளர்ந்தால், இன்னும் பலருக்கு உதவ முடியும்’ என்று சொன்னார். அதை உறுதியாக பிடித்துக்கொண்டு, கதாநாயகனாக நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். தயாரிப்பாளர் ஜெய் கிரண், இயக்குனர் ஷெரிஃப் ஆகியோருக்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடிக்க 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகள் புறக்கணித்துவிட்டனர். 51வது நபராக என்னுடன் நடிக்க நமீதா கிருஷ்ணமூர்த்தி சம்மதித்தார். அவருக்கு எனது நன்றி.