நடிகையின் இடுப்பை கிள்ளிய நடிகர் மீது மனைவி பகீர் புகார்
பாட்னா, செப்.4: போஜ்புரி நடிகர் பவன் சிங், விழா மேடையில் போஜ்புரி நடிகை அஞ்சலியின் இடுப்பை கிள்ளியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பவன் சிங், அவரது மனைவி ஜோதி சிங்கை விலக்கி வைத்திருக்கிறாராம். இது பற்றி ஜோதி சிங் கூறியது: என் அப்பா உங்களை (பவன் சிங்கை) சந்திக்க வந்தார், நீங்கள் அவரை மரியாதையாக கூட நடத்தவில்லை. நான் இவ்வளவு தண்டிக்கப்படுவதற்கு நான் என்ன தவறு செய்தேன்? நான் உங்களுக்கு தகுதியற்றவள் என்றால் என்னை, என் வாழ்க்கையை வாழ விட்டிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு எனக்கு பொய்யான வாக்குறுதியை கொடுத்து என்னை இப்படி நடுவழியில் தவிக்கவிட என்ன காரணம்?.
நான் தற்கொலை செய்துக்கொள்ளலாம், ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன். என்னை நீங்கள் உங்கள் மனைவியாக நினைக்கவில்லை. உங்கள் மனைவியாக இருக்க நான் தகுதியானவள் இல்லை என்றால் ஏன் எனக்கு முதலில் அன்பை தந்தீர்கள். இப்போது வெறுக்கிறீர்கள். உங்களுடன் வாழ எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் இப்போது மிகவும் மோசமான சூழலில் இருக்கிறேன் என்று ஜோதி சிங் கூறியுள்ளார்