காண்டாக்ட் லென்ஸ் போட்டதால் விபரீதம் சிம்பு பட நடிகையின் பார்வை பறிபோனது
மும்பை: சிம்பு ஜோடியாக ‘வானம்’ படத்தில் நடித்தவர் ஜாஸ்மின் பாஸின். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் படங்களில் நடித்தது குறைவு தான் என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் டெல்லியில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கொண்ட பிறகு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் பொறுத்துக்கொண்டு கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.
சிறிது நேரத்தில் கண் எரிச்சல் அதிகமாகி பார்வை மங்கலாகத் தொடங்கியிருக்கிறது. அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரேம்ப் வாக் செய்ய உதவி செய்தார்களாம். சிறிது நேரத்தில் அவருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர் டாக்டரிடம் சென்று சோதித்த போது அவருக்கு corneal damage ஏற்பட்டு இருக்கிறது என சொல்லி இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டுவிட்டார்கள். ‘தற்போது மும்பைக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன். இப்போது கண்பார்வை மங்கலாகவே தெரிகிறது. சீக்கிரம் குணமாகும் என நம்புகிறேன். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என ஜாஸ்மின் பாஸின் உருக்கமாக கூறியுள்ளார்.