தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நடிகை டான்ஸ் ஆடியபோது கழன்ற ஆடை: நெட்டிசன்கள் கடும் தாக்கு

மும்பை: மேடையில் நடனம் ஆடியபோது நடிகை ஷெர்லின் சோப்ராவின் ஆடை கழன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா, தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இவர் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்காக கவர்ச்சி ஆடை அணிந்து வந்திருந்தார் ஷெர்லின் சோப்ரா. அவர்...

மும்பை: மேடையில் நடனம் ஆடியபோது நடிகை ஷெர்லின் சோப்ராவின் ஆடை கழன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா, தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இவர் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்காக கவர்ச்சி ஆடை அணிந்து வந்திருந்தார் ஷெர்லின் சோப்ரா. அவர் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, மேலாடை பின்புறமாக திடீரென கழன்றது. உடனே அதை அவர் பிடிக்க முற்பட்டார். அப்போது அங்கு ஓடிவந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி, ஷெர்லினின் மேலாடையை பிடித்துக்கொண்டார்.

பிறகு, பாடல் நிறுத்தப்பட்டது. உடனே அங்கிருந்து ஷெர்லின் புறப்பட்டு மேக்அப் அறைக்கு சென்று, ஆடையை சரிசெய்து கொண்டு திரும்ப வந்தார். அதன் பிறகு பாதியிலிருந்து நடனத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் நிகழச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குள் ஆடை கழன்ற வீடியோ இணையதளத்தில் பரவிவிட்டது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ‘‘பிறரது கவனத்தை ஈர்க்கவே வேண்டுமென்றே கொக்கி இல்லாத ஜாக்கெட் அணிந்து ஷெர்லின் வந்துள்ளார். ஆடை கழன்றுவிழும் அளவுக்கு நடனமாடி போலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்’’ என காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.