தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

உதட்டில் ஊசி போட்டதும் அலங்கோலமான நடிகையின் முகம்: நெட்டிசன்கள் அதிர்ச்சி

மும்பை: பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்த நடிகை உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அது சரியாக இல்லை என்றும் 9 ஆண்டுகள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு...

மும்பை: பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்த நடிகை உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அது சரியாக இல்லை என்றும் 9 ஆண்டுகள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு அதன் மூலம் தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.

லிப் ஃபில்லரை நீக்கிய உடனே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத். அந்த வீடியோவில் அவரது உதடு எல்லாம் வீங்கிப்போய், முகமெல்லாம் வீக்கத்துடன் சிவந்து போய்விட்டது. கூடிய சீக்கிரமே அனைத்தும் சரியாகி புதிய தோற்றத்துடன் சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகை ரைசா வில்சனுக்கும் இப்படி முகம் வீங்கியது குறிப்பிடத்தக்கது. உர்ஃபி ஜாவேத்தின் இந்த கோரமான லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஹீரோயின்கள் ஏன் இப்படி இயற்கை அழகை விட்டுவிட்டு, சினிமா மோகத்துக்காக ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர் என்கிற கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.