தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தனக்கே தெரியாமல் நடிகையான மாளவிகா

தமிழில் ரியோ ராஜ் ஜோடியாக ‘ஜோ’ என்ற படத்தில் நடித்திருந்த மலையாள நடிகை மாளவிகா மனோஜ், மீண்டும் அவரது ஜோடியாக நடித்துள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ என்ற படம், வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. சினிமாவில் நடிக்க வந்தது குறித்து மாளவிகா மனோஜ் கூறுகையில், ‘எனது முதல் மலையாள படம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. நான் 10ம் வகுப்பு படிக்கும்போது, அப்படத்தின் ஆடிஷனுக்கு எனது போட்டோவை அம்மா அனுப்பி இருக்கிறார்.

அதில் நான் தேர்வாகும் வரை எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. கலையரசன் தங்கவேல் இயக்கிய `ஆண் பாவம் பொல்லாதது’ என்ற படத்தில், மீண்டும் ரியோ ராஜ் ஜோடியாக நடித்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது ஆண்கள் படும் சிரமங்களை பற்றி பேசும் படம் என்றாலும், குறிப்பாக பெண்களுக்கு தேவையான சில விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த படத்தில் நடித்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் ஆண்கள் எல்லோரும் பாவம் என்று சொல்ல மாட்டேன். சில ஆண்களை மட்டும் பாவம் என்று சொல்லலாம். மற்றபடி இன்றைய தலைமுறைக்கு தேவையான பல்ேவறு சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், ஜென் ஸீ ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.