ஆடிஷனில் செக்ஸ் டார்ச்சர்; நடிகை அனித் பகீர்
மும்பை: கடந்த 2022-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் உருவான ‘சலாம் வெங்கி’-யில் நந்தினி கேரக்டரில் நடித்தவர் நடிகை அனித் பட்டா. 2024-ல் ஓடிடி-யில் வெளியான Big Girls Don’t Cry சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து மோஹித் சூரி இயக்கத்தில் உருவான ‘சையாரா’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து, ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார் அனித். இந்தப் படம், உலக அளவில் 560 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி பிரமிக்க வைத்தது. சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தது தொடர்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ள இவர், கொரோனா காலத்தில் சினிமா வாய்ப்பு தேடி பல இணையதளங்களை தேடி அழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, 50 முதல் 70 சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு தனது வீடியோக்கள் மற்றும் சுய விவரங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். மேலும், வாய்ப்பு தேடிய போது வலைவிரிந்த மோசடி கும்பலிடம் சிக்கி, பல்வேறு போலி இணையதளங்களுக்கு வீடியோக்களை அனுப்பி ஏமாந்ததாகவும் அப்போது ஆபாசமாக ‘போஸ்’ கொடுக்கச் சொல்லி பலர் தன்னை நிர்பந்தம் செய்ததாகவும் பகீர் தகவலை அவர் கூறியுள்ளார். ‘‘ஆடிஷன் என்ற பெயரில் பல கொடுமைகள் நடக்கிறது. அதிலிருந்து மீண்டு வந்தேன்’’ என்றார் அனித் பட்டா.