நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் மன்னிப்பு
சென்னை: ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, ‘‘படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன?’’ என கதாநாயகனிடம் யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதை சம்பந்தப்பட நடிகையான கவுரி கிஷன் வன்மையாக கண்டித்தார். பிறகு நடந்த மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விவகாரத்தில் யூடியூபருக்கும் கவுரி கிஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம், நடிகை குஷ்பு, பாடகி சின்மயி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட திரையுலகினர் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த யூடியூபர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘எனது கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதனால் கவுரி கிஷன் மனம் வருத்தப்பட்டிருந்தாலோ காயப்பட்டிருந்தாலோ அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவரை காயப்படுத்துவது எனது நோக்கம் கிடையாது’’ என தெரிவித்துள்ளார்.
