தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விவசாயத்தை வலியுறுத்தும் ‘நாகரீகப் பயணம்’

ரிச் மூவிஸ், டிஎஸ்கே மூவிஸ் சார்பில் தாஸ் சடைக்காரன், பி.மணவாளன் இணைந்து தயாரிக்க, தாஸ் சடைக்காரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘நாகரீகப் பயணம்’. புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஏ.செந்தில், புதுவை எம்.ஜாகீர் உசேன் இணை தயாரிப்பு செய்துள்ளனர். படம் குறித்து எம்.ஜாகீர் உசேன் கூறுகையில், ‘இன்னும் 25 வருடங்களுக்கு பிறகு எல்லோருடைய வீட்டிலும் அனைத்து பொருட்களும் இருக்கும். ஆனால், அரிசி என்பது இருக்காது.

ஏனென்றால், விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் இருக்கிறது. விவசாயத்தை சார்ந்த படத்தை உருவாக்கும் எண்ணத்தை தாஸ் சடைக்காரன் என்னிடம் சொன்னார். அந்த நல்ல எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் இருவரும் சேர்ந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம்’ என்றார். தாஸ் சடைக்காரன் கூறும்போது, ‘படத்தை 40 நாட்களில் அனைவரும் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்றார்.