தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரசிகர்களை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர், ஐஸ்வர்யா மேனன். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘நான் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாக வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால், வெற்றி என்பது ரசிகர்கள் தரும் ஆதரவில் மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கு ஒரு படம் பிடித்தால் மட்டுமே அது வெற்றிபெறும். இப்போது நான் மிகவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறேன். அப்படிப்பட்ட கதைகள் எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் அவற்றை நான் விட மாட்டேன். மலையாளத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்’ என்றார். சமூக வலைத்தளங்களில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கி வரும் ஐஸ்வர்யா மேனன், அடிக்கடி போட்டோஷூட் செய்து, கிளாமர் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வெள்ளை நிற கிளாமர் உடையில் தோன்றிய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.