காதல் வலையில் சிக்கிய ஐஸ்வர்யா
இதற்கு முன்பு ஐஸ்வர்யா லட்சுமியுடன் தன்னை இணைத்து வெளியான கிசுகிசுக்களுக்கு பதிலளித்த அர்ஜூன் தாஸ், ‘ஒரு படத்தில் நடிப்பதற்காக நானும், ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டோம். உடனே நானும், அவரும் காதலிப்பதாகவும், விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. அவர் எனது நெருங்கிய தோழி மட்டுமே. எங்களுக்கு இடையே காதல் இல்லை. நான் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. எனவே, என் திருமணத்துக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை’ என்று மறுத்தார். ஐஸ்வர்யா லட்சுமி அளித்திருந்த விளக்கத்தில், ‘நானும், அர்ஜூன் தாஸும் நல்ல நண்பர்கள் மட்டுமே. மற்றபடி எங்களுக்குள் எதுவும் இல்லை.
நாங்கள் வெளியிட்ட போட்டோ இந்தளவுக்கு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்றார். இந்நிலையில், மீண்டும் அவர்கள் வெப்தொடரில் நடித்த தகவல் வெளியானவுடன், மீண்டும் அவர்களை பற்றிய காதல் வதந்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி 1’, ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தற்போது புதிய வெப்தொடர் ஒன்றை எழுதி இயக்குகிறார். இதில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ளதால், மீண்டும் அவர்கள் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளனர். வழக்கம்போல் அவர்கள் எதுவும் இல்லை என்று மறுத்தாலும், நெருப்பில்லாமல் புகையுமா என்று சில நெட்டிசன்கள், காதல் வதந்திகளுக்கு எண்ணெய் ஊற்றி வருகின்றனர்.