ரூ.15 கோடி கார் வாங்கிய அஜித்
சென்னை: சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக மதிக்கிறார். சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார் இப்போது அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ரேஸ் காரை அஜித் வாங்கியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த MCLAREN Automotive என்ற நிறுவனம் இந்த ரேஸ் காரை தயாரித்துள்ளது. ரேசுக்கு தேவையான ஸ்பெஷல் எடிசன் இந்த காரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த காரின் விலை ரூ. 15 கோடி என்று கூறப்படுகிறது. அந்த கார் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
